வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்

CID - Sri Lanka Police Negombo Department of Prisons Sri Lanka Prison Ministry of justice Sri lanka
By Kanthan Jul 13, 2026 02:10 AM GMT
Report

கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்,

5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும்.

அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம்.

அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும்.

விசாரணை அதிகாரிகளை கதிகலங்க வைத்திருக்கும் சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட பை! ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரவல்...

விசாரணை அதிகாரிகளை கதிகலங்க வைத்திருக்கும் சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட பை! ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரவல்...

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான்.

அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை.

இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது.

டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது. இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.

கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர். நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர்.

முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர்.

அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது. சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன.

அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள்.

மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.

உடற்பயிற்சிப் பிரிவு உடைக்கப்பட்டது

சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர்.

உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள்.

என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள்.

வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள் | Negombo Prison Cracks Injured Prison Officer

முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று.

அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன். "சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர்.

இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதிகாரிகளை பாதுகாத்த கைதிகள்

அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது.

அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள்.

எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது. அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது.

அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள்.

நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..

நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..

அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர்.

எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை. இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார். 

வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள் | Negombo Prison Cracks Injured Prison Officer

நீர்கொழும்பு சிறை மோதல் எதிரொலி: கைதிகளின் வழக்கு இனி காணொளியில்!

நீர்கொழும்பு சிறை மோதல் எதிரொலி: கைதிகளின் வழக்கு இனி காணொளியில்!

you may like this video  


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US