நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் அநுர அரசை ஆட்டம் காணச் செய்யும் ஒரு சதி! விரைவில் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைக் கலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட சதி
தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தையும், உயிரிழப்புக்களையும் இந்த அரசாங்கம் பாதுகாக்க தவறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,
அரசாங்கத்தினால், பாதுகாப்பு வழங்க இயலாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே இருந்த ஒரு மோதல் மீண்டும் தலைதூக்கியதற்கும், பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பின்னால் பாரிய சதித்திட்டம் உள்ளது என நான் நினைக்கின்றேன். இதன் உண்மைத் தன்மையை நாங்கள் கண்டறிய வேண்டும்.

இந்த அரசை மாற்றி, எந்த வழியிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் குழுக்கள் இதன் பின்னணியில் உள்ளன என நாங்கள் கருதுகின்றோம்.
குறித்த குழுவைச் சேர்ந்த பலர் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். எனவே, தங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, அரசை மிக விரைவில் பதவியில் இருந்து நீக்கத் திட்டமிடும் ஒரு குழு உள்ளது.
ஆகையால், அரசாங்கத்திற்கு எதிராக சதி மேற்கொள்ளும் ஒரு குழு இருக்கும் போது, இவ்வாறான திட்டமிட்ட சம்பவங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri