17 வயது சிறுமியை காணவில்லை: பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவை பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிறுமியின் புகைப்படத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், அவரைக் கண்டு பிடிப்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும் குறித்த சிறுமி பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் - 0718 591 630 நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் - 0312 222 227
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |