பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்: பக்தர்களுக்கு அழைப்பு (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவமானது எதிர்வரும் (04.08.2023) ஆம் திகதி அன்று சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆலயபரிபால சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதமகுருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் வெள்ளிகிழமை காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெறும்.
இதனை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட இருக்கின்றது.
ஆலய பூசகரால் பாரம்பரிய முறைப்படி 4.30 மணியளவில் கோட்டக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்று மறுநாள் அதிகாலை 4 மணியளவில் பரிகலம் வழிவிடுதல் நிகழ்வு இடம்பெறும்.
எனவே அன்றைய தினத்தில் அனைத்து பக்தர்களையும் ஒன்று திரண்டு ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது.
தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        