தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள் (வீடியோ)

Sri Lanka Colombo Department for Registration of Persons
By Murali Dec 24, 2021 10:39 AM GMT
Report
125 Shares

தேசிய அடையாள அட்டை என்பது ஒவ்வொரு இலங்கை பிரஜையினதும் மிக முக்கியமான அங்கமாகும்.

ஒருவரின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணமாக அடையாள அட்டை கருதப்படுகின்றது. எனினும், அதன் அவசியத்தினையும் தேவையினையும் அறியாத மக்கள் அதிகமுள்ளனர்.

இந்நிலையில், தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம், அதனை பெற்றுக் கொள்ளும் வழிமுறை தொடர்பாக இந்த பதிவின் ஊடாக நாம் காணலாம்.

தகுதிகள்...

  • இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • 15க்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • 16 வயதை விட ஒரு நாள் கூடினாலும் 500 ரூபா அபராத பணம் செலுத்த வேண்டும். எனினும், பிரதேச செயலாளர் இந்த கட்டணத்தை தீர்மானிக்க முடியும்.
  • பிரதேச செயலகத்தில் பெறப்பட்ட உண்மையான பிறப்பு சான்றிதழ் அவசியம்.
  •  கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் வேண்டும்.

ஆயத்தம்.....

  • புகைப்படம், அனுமதி பெற்ற புகைப்பட நிலையங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • இதன்போது வழங்கப்படும் ஆவணப் பிரதி கிராம அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கிராம அலுவலரின் கடமைகள்.....

  • அனுமதி பெற்ற புகைப்பட நிலையத்தில் இருந்து வழங்கப்படும் ஆவணம் கிராம அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பம் கிராம அலுவலரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பம், புகைப்பட  ஆவணப் பிரதி மற்றும் 100 ரூபாய் பணம் கிராம அலுவலரிடம் கையளிக்க வேண்டும். கிராம அலுவலர் அதனை ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பார்.
  • அவசர தேவையாக இருக்குமாக இருந்தால் அதனை உறுதிப்படுத்தும் வகையிலான கடிதம் ஒன்றை விண்ணப்பதாரி கிராம அலுவலருக்கு கையளிக்க வேண்டும். 500 ரூபா கட்டணமும் செலுத்த வேண்டும்.
  • கிராம அலுவலர் அதனை உறுதிப்படுத்திய பின்னர் பிரதேச செயலாளரும் உறுதிப்படுத்துவார்.

அடையாள அட்டையினை புதிப்பிப்பதற்கான நடைமுறைகள்.....

  • சேதமடைந்தால் அல்லது உருவ மாற்றம் ஏற்பட்டிருந்தால் புதுபிக்கலாம்.
  • இதற்கு 250 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்.
  • அவசர தேவையாக இருந்தால் இதற்கும் கடிதம் கையளிக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள்......

  • பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேடுதல் விளைவு சமர்பிக்க வேண்டும்.
  • 15 தொடக்கம் 40 வயதானவர்கள் அனுமான பிறப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்....

  • பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் சாகோதரர்களின் ஆவணங்களை சமர்பிக்கலாம்.
  • சத்தியக் கடதாசி இருத்தல் வேண்டும்.
  • சிறிய வயதில் தடுப்பூசி செலுத்திய அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
  • சிறிய வயதில் கணிக்கப்பட்ட ஜாதக குறிப்பை சமர்பிக்க வேண்டும்.

காணமல் போன அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள......

படி 1 : சம்பந்தப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தல்.

படி 2 : பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல்களுக்கான புகார்படிவத்தை பொலிஸ் அலுவலரால் அறிக்கை எழுதப்பட்ட பின் கேட்கலாம்.

குறிப்பு :தகவல்களுக்கான புகார்களின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ: 25.00 யை கட்டணமாக செலுத்த வேண்டும்.

படி 3 : பொலிஸ் அலுவலர் தகவல்களுக்கான புகார்களை வழங்குவதுடன் ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல்களையும் சேர்த்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க வேண்டும்.

படி 4 : பாதிக்கப்பட்ட நபர்கள் பூர்த்தி செய்வதற்க்காக ஆட்பதிவு திணைக்களம் வழங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அப்படிவத்தையும் அத்துடன் கிராம சேவகர்,கோட்ட செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களையும் சேர்த்தல் வேண்டும்.

குறிப்பு 01 : கிராம சேவகர் கேட்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அங்கீகாரம் அளிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தோடு விண்ணப்பத்தை ஆராய வேண்டும்.

குறிப்பு 02 : பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட தனது சொந்த பிரிவில் உள்ள அமைப்பிடம் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை கேட்கலாம்.

படி 5 : பாதிக்கப்பட்ட நபர் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை கிராம சேவகரிடம் சமர்பிக்கவும்.

படி 6 : கிராம சேவகர் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை கோட்ட செயலகத்தில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒன்றன் பின் ஒன்றாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

படி 7 : அவன்/அவள் முத்திரையிடப்பட்ட உறையை கிராம சேவகரிடம் கொடுத்திருந்தால்,பாதிக்கப்பட்ட நபர் தேசிய அடையாள அட்டையை கிராம சேவகர் அலுவலகத்திலிருந்தோ அல்லது பதிவு அலுவலகம் மூலமோ பெற்றுக் கொள்ளலாம்.

தகுதிக்கான வரையறைகள்....

இலங்கையை அடிப்படையாக கொண்டு வசிக்கும் வெளிநாட்டவரோ அல்லது வேறு குடிமகனோ தேவையேற்படும் போது இச்சேவையை பெறலாம்.

சமர்ப்பிக்கும் முறைகள்...

சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு செல்லுதல், பாதிக்கப்பட்ட நபர் புகார்களை தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுதல்.

பொலிஸ் நிலையம் வேலை பார்க்கும் நேரம்: 24/7/365 நாட்கள்

புகாரிலிருந்து எடுக்கப்பட்ட பிரதியைப் பெறுதல்...

பாதிக்கப்பட்ட அவன்/அவள் தான் இழந்த பொருள் சம்பந்தமான சரியான புகார் பிரதியை உள்ளூர் பொலிஸ் நிலையத்திலிருந்து பெற வேண்டும்.மேலும் அவன்/அவள் அப்புகார் தனது தானா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சில திணைக்களத்திற்கு தேவையான சரியான புகார்களுக்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

  • தேசிய அடையாள அட்டை : கிராம சேவகர் ஆட்பதிவுத் திணைக்களம்
  • கடவுச்சீட்டு : குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
  • ஓட்டுநர் உரிமம் : மோட்டார் வாகனத் திணைக்களம்

குறிப்பு 01: இதே போன்று மற்ற திணைக்களங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தேவையான சரியான தகவல்களின் புகார் பிரதியை சம்பந்தப்பட்ட நபர்கள் செயல்முறைகள் முடிவடைவதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு 02: தேசிய அடையாள அட்டையை தொலைத்த பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் மூலம் உள்ள ஆட்பதிவு அலுவலகத்தால் வழங்கப்படும் படிவத்தினை பெற வேண்டும்.

தேவையான ஆவணங்கள்...

  • தேசிய அடையாள அட்டை (முந்தைய தேசிய அடையாள அட்டையின் இலக்கம்) 
  • கடவுச்சீட்டு (முந்தைய கடவுச்சீட்டின் இலக்கம்)
  • ஓட்டுநர் உரிமம் (முந்தைய ஓட்டுநர் உரிமத்தின் இலக்கம்)

சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பம்...

  • பொலிஸ் நிலையம்,கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகங்களால் அங்கீகரித்த ஆவணங்கள் (புகார் படிவத்திற்கான தகவல்கள் மற்றும் ஆட்களை பதிவுசெய்வதற்கான படிவம்). 
  • அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கிராம சேவகரிடம் சமர்பித்தல்.

விண்ணப்பப்படிவம்...

பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய தேவையில்லை,ஆனால் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க படிவங்களை வழங்கும். பொலிஸ் நிலையத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கான புகார் படிவம் கீழே காண்பிக்கபட்டுள்ளன (தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம்).

குறிப்பு : சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையம் புகார்களுக்காக பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களின் பிரதியை (DOP F424) பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கும்.

காலக்கெடு...

தொலைந்து போன தேசிய அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு மற்றும் வேறு ஆவணங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் அதனுடன் தொலைந்து போன மின்சாதனங்களின் மீதான புகார்களை கையாளுவதற்கான காலக்கெடானது பின்வருவனவற்றை போலவே ஒத்திருக்கும்.

செயல்முறைக் காலக்கெடு..

புகாரை தனித்துப் பிரித்தல்: ஒரு நாளுக்குள் விவகாரங்கள் அளிக்கப்பட்ட திணைக்களத்தின் திறமையை பொறுத்தே மொத்த செயல்முறைக் காலக்கெடு அமையும். (ஆட் பதிவுத் திணைக்களம்,மோட்டார் வாகன திணைக்களம்,குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் வேறு தொடர்புடைய அமைப்புகள்)

வேலை நேரங்கள்...

பொலிஸ் நிலையம் - 24/7/365 நாட்கள்

சேவைத் தொடர்பான கட்டணங்கள்...

தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் வேறு காரணங்களுக்கான புகாரை தனித்து பிரித்தலுக்கான செலவீனம் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ: 25.00

அபராதங்கள் மற்றும் இதரக் கட்டணங்கள்.....

சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து தொலைந்த பொருட்களுக்கான புதுப்பித்தலுக்கு சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் மூலம் அபாராதம் வசூலிக்கப்படும்.

குறிப்பு 01: விண்ணப்பதாரர் தன்னுடைய வேலை முடிவடைய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அபராதம் அல்லது செலவீனத்தை செலுத்தியிருக்க வேண்டும்.

தேவையான இணைப்பு ஆவணங்கள்...

தேசிய அடையாள அட்டைக்காக பொலிஸ் நிலையத்தில், சம்பந்தப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிப்பதுடன் தன்னுடைய தேசிய அடையாள அட்டையின் தற்போதய இலக்கத்தையும் வழங்க வேண்டும்.

குறிப்பு 01: புதிய தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வேண்டப்பட்ட தொடர்புடைய இணைப்பு ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு : ஒவ்வொரு திணைக்களத்திற்கும் தேவையான இணைப்பு ஆவணங்கள் வேறுபடும். மேலே குறிப்பிடப்பட்ட வேறு திணைக்களங்களும் மற்றும் அமைப்புகள் வேண்டும். தேவையான இணைப்பு ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்க வேண்டும்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US