ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் விசாரணைகள் வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்; பரிந்துரைகள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும்.
அதே நேரத்தில் தாக்குதல்களை யார் ஏற்பாடு செய்தார்கள் மற்றும் வசதி செய்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுகொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.
கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற கறுப்பு ஞாயிறு போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய கார்டினல்
ரஞ்சித், ஜனாதிபதி ஆணையத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆணைக்குழு குற்றம் கண்ட சிலர் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கார்டினல் ரஞ்சித் கோரியுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் இது தொடர்பான நடைமுறை நடவடிக்கைகளைக் காணலாம் என்று தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
