சுவிஸில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை
சுவிட்சர்லாந்தில் பல பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தற்பொழுது கோவிட் தடுப்பூசி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
எனவே சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்க விரும்புபவர்கள் இந்த கோவிட் சான்றிதழ் பற்றிய முக்கிய விபரங்கள் எவை என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானதாகின்றது.
ஐரோப்பிய மருந்து முகவர் (EMA) நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்கள் சுவிட்சர்லாந்து தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்ய முடியும்.
ஐரோப்பிய மருந்து முகவர் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எவை?
பைசர், மொடர்னா, அஸ்ட்ரா சென்கா, ஜான்ஸ்ஸான்
நீங்கள் முழுமையாகத் தடுப்பூசி ஏற்றிக் கொண்டிருக்க வேண்டும். முழுமையாகத் தடுப்பூசி ஏற்றுவது என்பது ஜான்ஸ்ஸான் (ஒரு மாத்திரை போதுமானது) தடுப்பூசி தவிர்ந்த ஏனைய மூன்று வகையினதும் இரண்டு மாத்திரைகளை ஏற்றிக்கொள்வதனை குறிக்கும்.
சுவிஸ் கோவிட் சான்றிதழ் முறையில் ஏற்றுக்கொள்ளப்படாத தடுப்பூசிகள்?
சினோபார்ம், ஸ்புட்னிக், சினோவெக்
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட எனினும் EMAயினால் அனுமதிக்கப்படாத தடுப்பூசி ஏற்றிக் கொண்ட வெளிநாட்டுத் தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு இந்த விடயத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்கச் சான்றிதழ் தேவையா?
இல்லை. சினோபார்ம், ஸ்புட்னிக் மற்றும் சினோவெக் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும். சுவிட்சர்லாந்தின் கோவிட் சான்றிதழ் முறைமை ஐரோப்பிய நியமங்களுக்கு அமைவானது.
வெளிநாட்டு கோவிட் சான்றிதழை சுவிஸ் சான்றிதழாக மாற்ற முடியுமா?
இதுவரையில் முடியாது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உறுப்பு நாடுகளின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அமெரிக்கா போன்ற மூன்றாவது நாட்டின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
வெளிநாட்டிலிருந்து கொண்டு கோவிட் சான்றிதழ் எவ்வாறு பெறுவது?
சுவிட்சர்லாந்திற்குப் பிரவேசிக்க முன்னரே சுவிஸ் கோவிட் சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம். (EMA) photo file, scan அல்லது PDF போன்ற முறைகளில் உங்கள் தகவல்களைப் பதிவேற்ற முடியும்.
எங்கு சுவிஸ் சான்றிதழைப் பெற முடியும்?
அனைத்து கான்டன்களிலும் கோவிட் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் இணைய தளத்தில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு சான்றிதழைப் பெறுவது?
தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் அல்லது அலைபேசி செயலிகளின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக App StoreExternal link, Google Play StoreExternal link
சான்றிதழைப் பெற எவ்வளவு காலம் தேவைப்படும் ?
சில நாட்கள் தேவைப்படும். எவ்வாறெனினும் அதிகளவு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் சில வாரங்களும் தேவைப்படலாம். சான்றிதழைப் பெற என்ன செய்ய வேண்டும்.