திட்டும் தேவை இருந்தால் திட்டுவேன்: ஞானசார தேரர்
பௌத்த பிக்குமார் இருவரை தொலைபேசியின் ஊடாக கெட்ட வார்த்தைகளால் திட்டியமை சம்பந்தமாக கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda Aththe Gnanasara) தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றில் ஒலிப்பரப்பான கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட ஞானசார தேரர்,எவரையாவது திட்டும் தேவை இருந்தால், திட்டுவேன் எனவும் கூறியுள்ளார்.
இதனால், இது தனிப்பட்ட விடயம். இவை அனைத்து திட்டமிட்டு நடக்கின்றன. முகநூல், யூடியூப் வலையொளித்தளம் என்பன பொலிஸோ, நீதித்துறையோ அல்ல.
பௌத்த மத குருமாரை இஸ்லாமிய தீவிரவாதிகளாகவும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளாகவும் கட்டமைக்க சில தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.
தீவிரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நான் உட்பட பிக்குமாரை மதத் தீவிரவாதிகளாக முத்திரை குத்துகின்றனர் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியல் பிக்கு” என்ற எண்ணக்கருவை சமூகமயப்படுத்தியமை சம்பந்தமாக ஞானசார தேரர், மினிபுர தபோவனவாசி ரதன தேரர் மற்றும் கிருளபன தம்ம விஜய தேரர் ஆகியோர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டும் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri