முல்லைத்தீவு-நெடுங்கேணி வீதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்
சர்வதேச வன தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு-நெடுங்கேணி பிரதான வீதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் முல்லைத்தீவிலட இடம்பெற்றுள்ளது.
மாவட்ட வன உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்ட உதவி வன உத்தியோகத்தர் ஆகியவர்களின் வழிகாட்டலின் கீழ் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
மக்களால் வீதியின் இருபுறங்களிலும் வீசப்பட்ட பொலித்தீன் ,பிளாஸ்டிக் மற்றும் திண்ம கழிவுகள் அகற்றப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தில் முள்ளியவளை பொலீஸ், இலங்கை இராணுவத்தின் 592 வது காலாட்படை தலைமையகம்,கரைத்துரைப்பற்று பிரதேசபை ,மர வர்த்தக சமூகம் போன்ற கலந்துகொண்டன.
மக்கள் குப்பைகளை காட்டினுள் கொட்டுவதால் காட்டு வாழ் உயிரனங்களின் வாழ்கை கோலம் மாற்றத்திற்கு உள்ளாகின்றது.
இத்தோடு காட்டு வளமும் சிதைவடைகின்றது.இவற்றை தடுக்கும் நாக்கில் காடு பேணல் திணைக்களத்தால் "காட்டினுள் குப்பை கொட்டாதீர் '' எனும் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுளது.