விடுதலைப் புலிகளின் தலைவரின் மகனின் மரணம் எப்படி நடந்தது! சீமான் பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பிரபாகரன் மரணம் அடையவில்லை எனவும் அவர் உயிருடனும் நலமுடனும இருக்கிறார். இதனை அவரின் குடும்பத்தின் அனுமதியுடன் அறிவிக்கிறேன் என அறிவித்துள்ளார்.
நெடுமாறனின் இந்த அறிவிப்பு உலகத் தமிழரிடையே இன்னும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது என அது தொடர்பில் கூறுகையிலே சீமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருது தெரிவித்த அவர், '2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்று இலங்கை இராணுவம் அதற்கு சாட்சியாக பிரபாகரனின் உடலை காட்டியது.
'பிரபாகரன் ஒன்றும் திரைப்பட நடிகர் அல்ல. எப்ப வரனுமோ அப்ப வருவேன் என சொல்லக் கூடியவர் அல்ல. இயற்கையில் பேரன்புக்காரர் பிரபாகரன்.
விடுதலைப் புலிகளின் தலைவரை பொறுத்தவரை எவ்வளவோ நிர்பந்தங்கள் வந்தபோதும் கூட, நாட்டை விட்டு போகமாட்டேன் என்பதுதான் அண்ணனின் நிலைப்பாடு.
சண்டைபோட்டு தான் சாக வேண்டும்
தனக்காக, தன் நாட்டு விடுதலைக்காக, தன் கட்டளையை ஏற்று பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பல ஆயிரம் போராளிகள் உயிர் நீத்ததை பார்த்தவர், தன் உயிரை பாதுகாத்து தற்காத்து ஒரு இடத்தில் உயிரோடு இருப்பார் எனில் அவரை நீங்கள் சிறுமைப்படுத்துவதாக அர்த்தம்.
அவர் தன் உயிருக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிற கோழை அல்ல. என் தோள்மேல் கை வைத்து கூறியது, ''சாகத் துணிந்துட்டீங்கன்னா எல்லாம் சாதாரணமா போய்டுவீங்க.. அந்த திமிரில்தான் நான் எதற்கும் பயப்படாமல் சண்டை செய்கிறேன். எப்படி இருந்தாலும் சாகப்போகிறோம்ல.. எதுக்கு சரணடைந்து சாகனும்? சண்டைபோட்டு செத்துடுவோம்.'' என தெரிவித்தார்.
இப்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என ஏன் சொல்லப்படுகிறது என்பது சிறிதுநாள் கழித்து அனைவருக்கும் தெரிந்துவிடும்.
இறுதி காலத்தில் மக்களோடு மக்களாகத்தான் பிரபாகரன் மகன் இருந்தார். அதில் எங்கள் துரோகிகள் சிலர்தான் பிரபாகரன் மகன் என காட்டிக் கொடுத்தனர்.
பிரபாகரன் மகன் இராணுவ பிடியில் இருக்கிறார் என சொல்லப்பட்டது. அவரது குடும்பத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்கக் கூடாது என சொன்ன ஆள் யார் என்பதும் தெரியும்.
அவருடைய மகன் பாலச்சந்திரன் நெஞ்சில் 5 குண்டுகள். அதற்கெல்லாம் யாரும் பாவம் பார்க்கவில்லையே.
பாஜகவின் கொண்டாட்டம்
இப்போது சுபாஷ் சந்திரபோஸ் போல பிரபாகரனை எங்கள் இனத்தவர் என பாஜக கொண்டாட நினைக்கலாம். தமிழ்த் தேசிய அணுக்களோடு கலந்துவிட்ட மாபெரும் வீரன் அவர்.
பாஜகவுக்கும் பழ.நெடுமாறனுக்கும் என்ன தொடர்பு என்பதை எப்படி பேசுவது? அதை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இப்போது13-வது திருத்தத்தை பாஜக பேசுகிறது. 35 ஆண்டுகள் கழித்து பேசுகிறார்கள். அந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தால் தான் அத்தனை பிரச்சினையுமே உருவானது.
அப்போது அனுப்பி வைக்கப்பட்ட அமைதிப்படை எங்கள் மண்ணில் செய்த அட்டூழியத்தால்தான் ராஜீவ் மரணம் நிகழ்ந்தது.
பொற்கோவிலுக்குள் இந்திரா காந்தி செய்ததற்கு எதிர்வினை அவரது மரணம். என் தாய்நிலத்தில் என்ன செய்தீர்களோ அதற்கு எதிர்வினை மரணம் என நிகழ்ந்தது.”என கூறியுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)