மட்டக்களப்பில் யானைகளினால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளினால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று(10.2.2026)மாலை நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தின்போது, போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடரும் யானைகளில் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நடவடிக்கை
அத்துடன் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அசமந்த போக்கு காரணமாக பிரதேசத்தில் முறையான வேலைத்திட்டங்கள் நடைபெறாமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் யானைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை முன்வைத்து அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு அறிவித்திருக்கின்றபோதிலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் மட்டும் அவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.