புலம்பெயர்ந்த மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டம்
புலம்பெயர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் இந்திய பல்கலைக்கழகங்கள் நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் தொழில்சார்ந்த மற்றும் தொழில் முறைசாராத (மருத்துவம்,துணைமருத்துவம் தவிர்ந்த) கற்கை நெறிகளுக்கான நிதி உதவியினை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்கள்
புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். இந்த வரையறைகளுக்கு அமைவாக இலங்கையில் உள்ள மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை http://www.spdcindia.gov.in/login/guideline.php என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
தகுதியுடைய விண்ணப்பதாரிகள் 2022 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேலே
குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்று கொழும்பில்
அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
