இந்திய மீனவர்கள் 23 பேர் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலை
அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 23 பேர் சார்பிலும்
இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜராகியிருந்தார்.
புதிய இணைப்பு
அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே இன்று அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இணைய வழியில் விசாரணைகள் இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.



