அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வேலைத்திட்டத்தில் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
நீர் சேகரிப்பு நிகழ்வானது
அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது.
அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது.
இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது.
விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
