இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்
தேசிய அபிவிருத்தி வங்கிக்குள் (NDB Bank) நடைபெற்ற உள்மோசடி குறித்து விரிவான விசாரணையை நடத்த ஒரு சர்வதேச அமைப்பை ஈடுபடுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச அமைப்பு இந்த விசாரணைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவுறுத்தல்
உள் மோசடி குறித்து விசாரணை
தேசிய அபிவிருத்தி வங்கியில் நிகழ்ந்த உள் மோசடி குறித்து இலங்கை மத்திய வங்கி தினசரி அடிப்படையில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், விசாரணை முன்னேற்றம் மற்றும் இறுதித் அறிக்கை ஆகியவை நேரடியாக இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே சமயம், அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி, தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB Bank) உள் கட்டுப்பாடு மற்றும் ஆளுகை செயல்முறைகளை வலுப்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்
இலங்கை மத்திய வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாகத்துடனும், பிற தொடர்புடைய பங்குதாரர்களுடனும் நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றி வருகிறது.

மேலும், வைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் தேவைப்பட்டால் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் நடந்த இந்த சம்பவத்தின் விளைவாக ஏனைய ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், போலியான அறிக்கைகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொள்கின்றது.
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri