அதிகரிக்கும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள்
தற்போது வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத உள்ளூர் இழுவைமடி தொழில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளை பதிவு செய்தும் எந்தவிதமான பதிலும் இல்லை என நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர் பிரச்சினைகள்
சட்டவிரோத உள்ளூர் இழுவைமடி தொழில் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சருக்கு வழங்கியும் எந்தவிதமான பதிலும் இல்லை.
இதனால் கடற்றொழில் சமூகம் தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு எவரும் இல்லை.
மேலும், கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை என்றும், தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் அசரியல் அபிலாசைகளை வென்றெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



