கேப்பாப்புலவு விமானப்படை சிப்பாய் எடுத்த தவறான முடிவு
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படைத்தளத்தில் கடமையாற்றும் விமானப்படை சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.11.2022) இரவு இடம்பெற்றுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட சிப்பாய்
விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 வயதுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம்
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கை பெறப்பட்ட பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
