கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதல்:கடற்படை வீரர் காணாமல் போயுள்ளார்
யாழ்ப்பாணம் காரைநகர் கடல் எல்லையில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இரண்டு கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கடற்படை வீரர், கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன கடற்படை வீரர் இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. கடற்படையின் சுழியோடிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடி வருகின்றனர்.
காரைநகர் கடற்படை முகாமுக்கு சொந்தமான இரண்டு வோட்ட ஜெட் படகுகளில் கடற்படையினர் கடற்படை இறங்கு துறையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய படகு ஒன்றை அவதானித்துள்ளனர்.
அந்த படகை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், அது நிறுத்தப்படால் சென்றுள்ளது. இதனையடுத்து கடற்படையின் வோட்டர் ஜெட் படகுகள் அதனை பின் தொடர்ந்தும் சென்ற போதே இரண்டு படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
விபத்து நடந்த போது ஒரு படகுகில் இருந்த கடற்படை வீரர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
