ஒளிப்பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கடற்படையால் கைது
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று காலை கட்டைக்காட்டு கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் இரண்டு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam
