யாழில் சிறப்பிக்கப்பட்ட நவராத்திரி விழா (Photos)
சக்திக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகிறது.
அந்தவகையில் கடந்த ஒன்பது நாட்களாகவும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்குரிய பூஜைகள் நடைபெற்று இன்றையதினம் விஜயதசமி அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த விஜயதசமியானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
கல்லூரியின் அதிபர் லங்கா பிரதீபனின் தலைமையில் இந்த நிகழ்வானது அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்வுகள்
இதன்போது பூஜை வழிபாடுகள், ஏடு தொடக்கல் ஆகிய வைபவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன.
நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள், மாகாண - தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலையில்
கற்பித்து அதிபராக பதவி உயர்வு பெற்ற ஆறு அதிபர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.





















11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
