கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தில் சிறப்பிக்கப்பட்ட விஜயதசமி பூஜை (Photos)
இசுருபாய கல்வி அமைச்சில் நேற்று (05.10.2022) விஜயதசமி பூஜை சிறப்பாக நடைபெற்றிருந்தது.
கலாநிதி சிவஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் பூஜையை நடத்தியிருந்தார்.
கல்வி அமைச்சர் சட்டத்தரணி சுசில் பிரேமஜெயந்த, இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருந்தனர்.
தேசிய கல்வி நிறுவகத்தில் விஜயதசமி சரஸ்வதி பூஜை
தேசிய கல்வி நிறுவகத்திலும் நேற்று (05.10.2022) விஜயதசமி சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றிருந்தது.
பூஜையில் ஏனைய சமய குருவானவர்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்ன, அச்சிடல் வெளியீடுகள் பிரிவு பணிப்பாளர் கலாநிதி எஸ்.கே.பிரபாகரன், சைவநெறி செயற்திட்டத்தலைவர் கலாநிதி பொன். ஜெயரூபன் உள்ளிட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.