யாழ். நாவலர் மண்டப வளாகத்தில் இருந்து தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு ஆளுநர் பணிப்புரை
யாழ். நல்லூர் நாவலர் மணிமண்டப வளாகத்தில் இருக்கும் தொல்பொருள் திணைக் களத்தினரை வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். நல்லூர் நாவலர் மணி மண்டபம் அமைந்துள்ள காணி இந்து கலாச்சார திணைக்களத்திற்கு சொந்தமாக காணப்படுவதால் அவர்களிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் நாவலர் மண்டபத்தின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து மாநகர சபையை விளக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினரையும் அங்கிருந்து வெளியேறுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அங்கிருந்து வெளியேறும் தொல்பொருள் திணைக்களத்தினர் தமது பொருட்களை பிறிதொரு
இடத்தை தேர்வு செய்து காட்சி படுத்துவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு
பணிபுரை விடுக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
