நெடுந்தீவு மக்கள் அவதானமாக இருக்கவும்: வைத்திய அதிகாரி முக்கிய அறிவுறுத்தல்
யாழ். நெடுந்தீவு மக்கள் அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய நோய் நிலைகளை குறைத்து அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக தொடர்வதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக நெடுந்தீவு வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரும் விபத்துக்கள், பாம்பு கடி மற்றும் தவிர்க்ககூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடற்போக்குவரத்தும் தடை
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவுக்கான நோயாளர் கடற்போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.
இந்நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri