நேட்டோ நாடுகளையே திணற வைக்கும் ரஷ்யா!உக்ரைனுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
சிவப்புக் கோட்டைத் தாண்ட ஜேர்மனி விரும்பவில்லை என ஜேர்மனியின் பொருளாதாரத்துறை மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் Robert Habeck தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜேர்மன் போர் வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவது என்பது சிவப்புக் கோடு. அதை ஜேர்மனி தாண்டாது.
நாம் இந்தப் போரில் ஒரு பாகமாக மாறிவிடக்கூடாது. நாம் குறிப்பிட்ட அளவுக்கு விலகியே இருப்பது முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
நேட்டோ நாடுகளின் உதவி
தற்போது பல நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய கடந்த காலங்களில் நேரடியாக ரஷ்யாவுடன் மோதுவது போன்ற நிலை உருவாகும் என்ற அச்சத்தில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி தயங்கியது.
இந்நிலையில் உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவதைக் குறித்துதான் ஜேர்மனியின் பொருளாதாரத்துறை மற்றும் ஆற்றல் துறை அமைச்சரான Robert Habeck இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.