கடும் போருக்கு மத்தியில் நேட்டோவில் உக்ரைன் இணையுமா! வெளியான தகவல்
"நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராகுவதற்கு நேட்டோவின் அனைத்து நட்பு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன" என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது தமது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து ஓர் ஆண்டை கடந்து நடந்து வரும் நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர் ஸ்டோல்டென்பெர்க் நேற்று கீவ்வில் உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்தார். அப்போது, ரஷ்யாவிற்கு எதிராக நாடு மேலோங்குவதை உறுதி செய்வதே இப்போது முக்கிய கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.
நேட்டோ நாடுகள் ஒப்புதல்
இந்த நிலையில், நேட்டோவில் உக்ரைன் இணைய அதன் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டதாக ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர் கூறுகையில், 'வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில் உக்ரைன் நேட்டோவில் சேர அனைத்து இராணுவக் கூட்டணி உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நேட்டோ உச்சி மாநாடு
எனவே, சூலையில் நடைபெற உள்ள அடுத்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உக்ரைனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.