இலங்கையில் பரவிய கோவிட் மரபணுவில் விசேட அறிகுறி - ஆபத்து என எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் தொற்றாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் PCR பரிசோதனைகளில் தொற்றாளர்களை அடையாளம் காண உதவும் S-புரதங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளரும் வைத்தியருமான சந்திம ஜீவன்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா போன்ற நாடுகளிலும் பரவிய புதிய கோவிட் மரபணுவில் இவ்வாறான S-புரதங்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் S- புரதங்களை பரிசோதனை செய்ய கூடிய விசேட PCR பரிசோதனை கிட்கள் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை கிட்டினால் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் என்ற காலப்பகுதிக்குள் முடிவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
குறித்த பரிசோதனை ஊடாக இலங்கையில் பரவும் கோவிட் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா இல்லை வேறு நாட்டில் பரவும் கொரோனா மரபணுவா என அறிந்து கொள்ள முடியும். கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒன்றை காண முடிந்தள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு பரவிய கோவிட்டிலும் S- புரதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அது பிரித்தானியாவில் பரவிய கோவிட் மரபணுவுக்கு சமமானதென கண்டறியப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.