பொது மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய புகையிரத தொழிற்சங்கங்கள்
புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த பணி புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத திட்டங்களில் காணப்படும் முறைகேடுகளுக்கு எதிராகவும், புகையிரத மேம்பாட்டிற்காகவும் இன்று நண்பகல் 12.00 மணி முதல், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்தன.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றையும் குறித்த சங்கத்தினர் அனுப்பியுள்ளனர்.
இதன்போது கொழும்பு - கோட்டையில் இருந்து முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து புகையிரத சேவைகளும் ரது்துச் செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மருதானையில் உள்ள புகையிரத தலைமையகத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் தற்போது பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.