நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை : 49 பேர் கைது
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள்
குற்றத்தடுப்பு விசேட கடமையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா போதிக்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விசேட நடவடிக்கைக்காக, எட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் போதைப்பொருள் கையாள்வதில் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam