இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராக மனு
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும் துணைத் தலைவியுமான சாமரி அதபது மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி ஆகியோர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தங்களை இலங்கை கிரிக்கெட்டின் (SLC) ஊழியர்களாக வகைப்படுத்தியதாகவும் இதனை சவாலுக்கு உட்படுத்துவதாகவும் இருவரும் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, ஏப்ரல் 03 ஆம் திகதி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களின் மனுவுடன் எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முடிவை ரத்து செய்ய இடைக்கால உத்தரவைக் கோரி மனுதாரர்கள் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கட் அணியின் தலைவர்களான சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோருக்காக கமிந்து கருணாசேனவின் அறிவுறுத்தலின் பேரில் ஷெனாலி டயஸ் மற்றும் சிதத் கஜயனகவுடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்.
சஞ்சய் ஃபோன்செக்கின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சா, பசிந்து பண்டாரா மற்றும் சஜனா டி சொய்சா ஆகியோர் இலங்கை கிரிக்கெட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
தங்கள் வழங்கி வரும் சேவையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பிழையாக வகைப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
