கடுமையான நிதி நெருக்கடியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை! - செய்திகளின் தொகுப்பு (Video)
நுகர்வோரின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.
நிலுவைத் தொகையாகவுள்ள 5.1 பில்லியன் ரூபாவை நுகர்வோரிடமிருந்து இன்னும் வசூலிக்கப்படாத நிலையில், ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொத்த நிலுவைத் தொகையில், உள்நாட்டு நுகர்வோர் சுமார் 3700 மில்லியன் ரூபாவும், மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் 265 மில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளரான ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam