தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகள் குறித்த விசேட திட்டம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமானது அமைச்சர் ஜீவன் தொண்டமானால் (Jeevan Thondaman) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று முன்தினம் (09) நடைபெற்றுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆவண நடவடிக்கைகள் மற்றும் உள்ளக செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசேட திட்டம்
இதற்கமைய, டிஜிட்டல் செயற்பாட்டு வலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேசிய ரீதியில் அந்நடவடிக்கையை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான செயற்பாடுகளை 'JICA' நிறுவனம் மற்றும் 'Cyclomax International (Pvt) Ltd' ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டுள்ளன.
EDMS (Electronic Document Management System) என அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் செயற்பாட்டு வலையமைப்பின் ஊடாக தலைமை அலுவலகத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 800 பிரிவுகளுக்கு மேற்பட்ட செயற்பாட்டு நிலையங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இதுவரை அச்சு ஊடகத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உள்ளக நடவடிக்கைகள் யாவும் டிஜிட்டல் முறையில் கடதாசி பயன்பாடின்றி நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கணினி வலையமைப்பு
இதற்கமைய, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, JICA மற்றும் Cyclomax International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
ஆறு மாத காலப்பகுதியில் உரிய கணினி வலையமைப்பினை தயாரித்து நாடளாவிய ரீதியில் பரந்து விரிந்துள்ள வடிகாலமைப்பு சபையின் சேவை நிலையங்களிலுள்ள 2000இற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கி வலையமைப்பினை இயங்கும் நிலைமைக்கு கொண்டு வர முடிந்துள்ளமையே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
இதன்போது, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
