விடியும் போது தேசிய வளம் விற்பனை செய்யப்படுகிறது - சஜித்
தற்போது விடியும் போது நாட்டில் எங்கோ ஓரிடத்தில் உள்ள தேசிய வளத்தை இரகசியமாக விற்பனை செய்த செய்திகளையே கேட்க கூடியதாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
“அரசாங்கம் மக்களை மரணத்தை நோக்கி கொண்டு சென்று, நாடு முழுவதையும் மாஃபியாக்கு வாய்ப்பளிக்கும் வேலைத்திட்டத்தை முற்றாக செயற்படுத்தி வருகிறது.
ஒரு புறம் 70 மற்றும் 77 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட வரிசை யுகம் நாடு முழுவதும் உருவாகியுள்ளது. பிள்ளைகளுக்கு பால் மா இல்லாமல் பெற்றோர்கள் கஷ்டங்களை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடிகளை மேற்கொண்டு உற்ற நண்பர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அரசாங்கம், மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வருகிறது. இது அரசாங்கத்திற்கு அந்தளவுக்கு சிரமமான காரியமல்ல.
கோவிட் தொற்று நோய் உக்கிரமடைந்த நேரத்தில் பாணிகளை கொடுத்து உயிர்களை ஆபத்தில் தள்ளிய விதம் நாட்டு மக்களுக்கு நன்றாக நினைவில் இருப்பதாகவும்“ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
