நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியமானது: நீதி அமைச்சர் வலியுறுத்து
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் முக்கியமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விஜயபாஸ ராஜபக்ச இன்று யாழ் ஆரியகுளம் நாக விகாரையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ரணிலின் திட்டம்
“தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுகின்றது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் இக்கட்டான காலத்தில் நாட்டினை பொறுப்பெடுத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்குரிய வேலைத்திட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்.

அதன் காரணமாக தற்பொழுது இங்கு சுமுகமான நிலை காணப்படுகின்றது. மேலும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிண்ணப்பம் ஏற்படு மிடத்து நாட்டினை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்” என்றார்.
யாழ்ப்பாண நாகவிகாரையில் தேசிய நல்லிணக்க சபையின் அங்கத்தவர்ககளுக்கான நியமனசான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் நீதி அமைச்சர் தலைமையில் நாகவிகாரையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மும்மத தலைவர்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam