பாரிய பின்னடைவை சந்திக்கவுள்ள தேசிய மக்கள் சக்தி : றிசாட் பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன்(Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
வவுனியா, சூடுவெந்தபுலவு கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை அதிக வாக்குகள்
மேலும் தெரிவிக்கையில், கடந்த இரு தசாப்தங்களாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இந்தப் பகுதியில் ஆற்றிய பணிகளுக்கு நன்றிக் கடன் தெரிவிக்கும் தேர்தலாக இந்த தேர்தலைப் பார்ப்பார்கள்.
தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அதிகளவிலான வாக்குகளை வழங்கினார்கள்.
அதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு - கிழக்கு பகுதி மக்களும், தென்பகுதி மக்களும் அதிக வாக்குகளை வழங்கினார்கள்.
ஆனால், கடந்த 6 மாத காலப்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் கூறியதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த தேர்தலில் பெரிய பின்னடைவை அவர்கள் அடைவார்கள்.
எமது கட்சி நாடாளுமன்ற தேர்தலை விட இம்முறை அதிக வாக்குகளைப் பெறுவோம். கடந்த முறை வன்னியில் நான்கு சபைகளை கைபற்றி ஆட்சி அமைத்தோம். இம்முறை அதிக சபைகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
