தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

Batticaloa Eastern Province
By Bavan Sep 11, 2026 06:08 AM GMT
Report

மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம் ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகரசபையின் 17ஆவது சபை அமர்வு நேற்று(10.09.2026) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பின்னர் மாநகரசபையின் எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம் துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ், லதீப் ஆகியோர் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எல்லைக்குள் இருக்கும் வீதிகள்

இன்று மாநகர சபையின் 17ஆவது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது. இந்த மாநகர சபை ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன் எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம். 

தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை | National People Power Mc Members Joint Request

இருந்தபோதும்; கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகரசபையின் செயற்பாடுகள் எவையுமே செயல்படுத்தப்படவில்லை. நீங்களும் சபையில் இருக்கின்றீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு, வடிகான் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றது. கட்டாக்காலி மாடுகள் தொல்லை தொடர்பாக எதுவும் நடைபெறவில்லை. இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப் பெறவில்லை.

கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில் மூழ்கியது. காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை. இது தொடர்பாக கடந்த காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை.

பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை

இந்த வருடம் மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப் போகிறது. எனவே மழை வெள்ளத்தால் தாண்டால் அதற்கான முழு பொறுப்பும் முதல்வர் எடுக்க வேண்டும்.

மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை இல்லை.

தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை | National People Power Mc Members Joint Request

அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து அடைத்துள்ளனர். ஏழைகள் துன்பப்படுகின்றனர். குறுக்கு வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர்.

இதனால் அந்த வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளனர். மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.

இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.  எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைத்தால் 6 மாதத்துக்கு வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்பிய மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியொழுப்புவோம்.

இது மக்கள் அரசாங்கம் மக்கள் ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மரண பீதியில் மகிந்தவின் மனைவி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

மரண பீதியில் மகிந்தவின் மனைவி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

சற்றுமுன்னர் FCID-ல் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

சற்றுமுன்னர் FCID-ல் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US