தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் இல்லை - சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த மாற்றங்களைப் பரிசீலித்து வருவதாக செய்திகள் வந்தாலும் குறித்த சட்டம் ஏற்கனவே பொதுமக்களுக்கு உதவியுள்ளது.
கோரிக்கை
இதன் காரணமாக அதை பலவீனப்படுத்தக்கூடாது என்று சமூக நீதிக்கான இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கு பதிலாக, பணியாளர்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற ஆணையகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கோரியுள்ளது.

ஆணையகம் எதிர்கொள்ளும் பிரச்சினை
அதேநேரத்தில் சில அரச நிறுவனங்கள், இந்த சட்டத்தின் உரிமைகளின் அடிப்படையில் பொது மக்களுக்கு தகவல்களை வெளியிடத் தவறி வருகின்றன.
இந்த நிலையில் ஆணையகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்க பொதுச் செயலாளர் சுனில் ஜெயசேகரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam