நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரம்: 143 பேர் மீது வழக்கு தாக்கல்
நுளம்பு கட்டுப்பாட்டு தேசிய வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று 143 பேர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர், சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாத்திரம் மொத்தம் 22,318 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 4,481 இடங்கள் டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன அதன்படி, 601 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இரத்தினபுரி
அத்துடன் 143 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டமே, டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்தின் அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |