அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கம்:ராஜித றிசாட்டுக்கு அமைச்சு பதவிகள்
அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளில் நியமிக்கப்பட உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தற்போது அரசாங்கத்திற்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்தள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதனடிப்படையில், ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக, எரிசக்தி அமைச்சராக றிசார்ட் பதியூதீன் நியமிக்கப்படலாம்.அவர் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடனுக்கு எரிபொருளை கொண்டு வரலாம் என கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி மாநாடு யோசனையின் மூலம் பசில் ராஜபக்ச ஒரு கல்லில் 5 மாங்காய்களை பறிக்க தயாராகி வருகிறார். இந்தியா தலைமையிலான பிரிவினைவாத சக்திகளும், புலம்பெயர்ந்த தமிழர்களும் அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
அதற்கு பின்னர் 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்பத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இது வெறுமனே தேசிய அரசாங்கம் அல்ல. அழுத்தங்களுக்குள் இந்த யோசனைகள் வரும் போதே எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இதன் ஊடாக பசில் ராஜபக்ச தனது ஐந்து துஷ்ட நோக்கங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறார். ஒரு கல்லில் 5 மாங்காய்களை வீழ்த்த பார்க்கின்றார். இதன் முதல் நோக்கமே சர்வக் கட்சி மாநாடு. இதன் ஊடாக தேசிய அரசாங்கத்தை அமைப்பது.
சர்வக்கட்சி மாநாடு என்பது அரசாங்கத்தின் யோசனையல்ல. இந்த அரசாங்கத்தில் யாரெல்லாம் அமைச்சர்கள் பதவிகளை பெற போகிறார்கள். ராஜித சேனாரத்ன, றிசார்ட் பதியூதீன் போன்றவர்கள். இது மக்களின் ஆணைக்கு முற்றாக புறம்பான செயல்.
இந்த துஷ்ட செயலில் சிக்கி விட வேண்டாம் என நாங்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருகிறோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை நீர்த்து போக செய்வது இரண்டாவது நோக்கம்.
சர்வக் கட்சி மாநாடு மூலம் மக்களின் மனங்களில் நன்மையான உணர்வை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம். இது பசில் ராஜபக்சவின் மனநல அறிவியல் தந்திரம்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் சர்வக் கட்சி மாநாட்டில் இணக்கத்தை பெறுவது மூன்றாது நோக்கம். தற்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அனுமதியின்றி நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ரூபாயை மிதவிட தீர்மானித்தார். இதனால், பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அவர் இந்த யோசனை கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் கஷ்டமான நிலைமைக்குள் தள்ளியுள்ளார்.
இவை அனைத்தையும் சர்வக்கட்சி மாநாட்டின் மீது சுமத்தி விட்டு, கைகளை கழுவுவதே பசில் ராஜபக்சவின் நோக்கம். அரசாங்கத்தை சிறந்த வழிக்கு கொண்டு வர 11 அரசியல் கட்சிகள் இணைந்து ஐக்கியமான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன.
அதற்கு பிரச்சினைகளை உருவாக்குவது நான்காவது நோக்கம். அந்த கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பது பசில் ராஜபக்சவின் திட்டம். இந்த கூட்டணிக் கட்சி முன்வைத்துள்ள முழு நாடும் சரியான பாதைக்கு என்ற யோசனை குறித்து சமுகத்தில் ஏற்பட்டுள்ள வாத விவாதங்களை நீர்த்து போக செய்வது ஐந்தாவது நோக்கம் எனவும் மருத்துவர் வசந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam