இலங்கையில் தேசிய அரசாங்கம் - பச்சை கொடி காட்டினார் கோட்டாபய
சிங்கள மக்களின் மிகப்பெரும் பலத்துடன் ஆட்சிப்பீடம் ஏறிய ராஜபக்ஷ அரசாங்கம், அதனை கொண்டு செல்ல முடியாத நிலையில் தள்ளாடி வருகிறது.
அறுதிப் பெரும்பான்மை என்ற சுப்பர் பவருடன் ஆட்சியிலுள்ள அரசாங்கமே, தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து ஆராய்ந்து வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாத அரசாங்கத்திற்கு வேறு வழியின்றி தேசிய அரசாங்கம் மூலம் அதனை நிவர்த்தி செய்ய திட்டமிடுகிறது.
இது தொடா்பில் பல கட்சிகளிடமிருந்து சாதகமான சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியிலுள்ள பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தேசிய அரசாங்கத்திற்கு அவர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான உறுதிப்படுத்தலை சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், அரசாங்கத்திலுள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உறுதிப்படுத்தியிருந்தனர். அதற்கமைய இது தொடர்பான சர்வ கட்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக்கால வரலாற்றில் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளது. கட்சி வேறுபாடின்றி அரசியல் இணக்கப்பாட்டுக்கு வந்து அவ்வாறானதொரு நிலைமையை எதிர்கொள்ள முடியாவிட்டால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும் நெருக்கடி நிலையிலுள்ள நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல தேசிய அரசாங்கம் வழி அமைத்துக் கொடுக்கும் என்பது அரசியல் தரப்பின் நம்பிக்கையாக உள்ளது.
அடுத்த மாதத்தில் இது தொடர்பில் சாதகமான நிலைப்பாடு வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
