நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு தின அனுஷ்டிப்பு (photos)
யாழ். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக்கொள்வோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு
மும்மத தலைவர்களது ஆசியோடு தேசிய கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமாகிய தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ்
தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும்
உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
