குறையும் வட்டி வீதங்கள்! வைப்புத் தொகையில் சிக்கல் இல்லை
முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், பல்வேறு துறைகளில் முதலீடு செய்தவர்கள் கடன் வட்டி வீதம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறையும் வட்டி வீதங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்லுமாறு சர்வதேச நாணய நிதியம் கூட கேட்டுள்ளது. உண்மையில் இது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது மக்களின் வைப்புத் தொகையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஜனாதிபதியும் மத்திய வங்கி ஆளுநரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்தன. அவர்கள் தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை அப்படித்தான் செயல்படுத்துகிறார்கள்.
முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், பல்வேறு துறைகளில் முதலீடு செய்தவர்கள் கடன் வட்டி வீதம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்க வழிவகுக்கும். அதேபோல், வட்டி வீதங்களும் குறையும் என்றும், இது பொருளாதாரம் முன்னேற உதவும் என்றும் நம்புகிறோம்.
தேசம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, ஒவ்வொரு அரசு நிறுவனமும், வங்கித் துறையும் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |