இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் மாவட்ட மட்ட பரிசளிப்பு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடனும் மற்றும் ஆலயங்களின் அனுசரணையுடனும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனனின் வழிகாட்டலுக்கு அமைவாக இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா நேற்று (11) திருகோணமலை மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரனின் தலைமையில் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
சிறப்பு அதிதிகளாக பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
எங்களுடைய ஒவ்வொரு மதத்தினையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் ஒவ்வொரு அமைச்சுக்களும், திணைக்களங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்து சமயத்தினுடைய வளர்ச்சியினை பேணி பாதுகாப்பதற்காக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பல்வேறு வகையான வேலை திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றது.
கௌரவிக்கும் நிகழ்வு
அந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த தேசிய ஆக்கத்திறன் மாவட்ட மட்ட பரிசளிப்பானது வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் ஒரு விழாவாக அமைந்துள்ளது என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
இதன்போது கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டனர்.










உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
