இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் தொடரும் மர்மம்: பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்
கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்கு பின்னர் மித்தெனியாவில் ஒளிந்துகொள்ள இஷாரா செவ்வந்திக்கு சம்பத் மனம்பேரி உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பிறகு, இஷாரா கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல நாட்கள் மறைந்திருந்த நிலையில் பின்னர், அவர் மதுகம பகுதிக்குச் சென்று, அங்கிருந்து மித்தெனிய பகுதிக்குச் சென்று பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், இவர் நேபாளத்தில் பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, வீட்டு உரிமையாளரிடம் தான் ஒரு இந்திய பெண் என்று கூறி வந்ததாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“அவர் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும், சுமார் ஒரு மாதமாக பக்தபூரில் தங்கியிருந்ததாகவும், பெரும்பாலும் தனது அறைக்குள்ளேயே தங்கியிருந்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்கு பின்னணி
அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்காவில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா- சுரேஸ் (33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49), யாழ்ப்பாணத்தை சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பேலியகொட குற்றப் பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் பொலிஸ் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோரால் மூன்று நாட்களாக நேபாளத்தில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், கெஹல்பத்தர பத்மேவின் கும்பலின் தலைவரான கம்பஹா பாபா என்ற பாதாள உலகத் தலைவர், ரோஹன் ஒலுகலாவுக்கு ரூ. 5 மில்லியன் இலஞ்சம் கொடுத்து காவலில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
