பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை - கடற்றொழில் அமைச்சர் அவசர கடிதம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில கடிதமொன்றையும் அவர் எழுதியுள்ளார்.
நடராஜர் சிலை பிரதிஷ்டை
மேற்படி கடிதத்தில்,
அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை இன்னமும் அங்கே நிறுவப்படாது இருப்பது பற்றி எம்மால் சுட்டடிக்காட்டப்பட்டது.

இந்த விடயத்தில் தாங்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் அக்கறையெடுத்து, இந்த சிலையை மேற்குறிப்பிட்ட இடத்தில் நிறுவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியிருந்தேன்.
இதனை நினைவூட்டி இந்த விடயத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri