வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பதவியிலிருந்து விலகினார் து.நடராஜசிங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.
அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை, ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட கடிதம் இன்றைய தினம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டு பிரதேசசபையின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அது மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதசே சபையின் தவிசாளர் பதவியிலும் மாற்றம் ஏற்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
