நஸீர் அஹமட் எம்.பியின் கருத்து வேதனையளிக்கின்றது! மட்டக்களப்பு அரசாங்க அதிபர் (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் காணி விண்ணப்பம் தொடர்பாக தெரிவித்த கருத்து மிகவும் வேதனையளிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் இரு விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். அதில் ஒன்று நிர்வாக மட்டத்தில் நாங்கள் காணி சம்பந்தமாகவும் மாவட்ட நிர்வாக சபையைக் குற்றம் சுமத்தியிருந்தார்.
இரண்டாவது இட மாற்றங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அனைத்து இடமாற்றமும் மாகாண உள்ளூராட்சி மன்ற அரச நிர்வாகத்தினால் இடம் பெறுகின்றன.
இதனுடைய விண்ணப்பங்களை எமது மாவட்ட செயலகத்துக்குக் கூறியிருந்தார்கள் அதற்கமைவாக நாங்கள் சகல விண்ணப்பங்களையும் அந்த அமைச்சுக்கு அனுப்பி இருந்தோம்.
ஆனால் எந்த ஒரு உறுப்பினர்களுக்கும் குறித்த இடம் மாற்றப் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை, மாறாக நாங்கள் விண்ணப்பிக்காத ஒருவருடைய பெயர் அந்த இடம் மாற்றத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த சந்தேகம் காரணமாகத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடம் நேரடியாக அந்தக் கருத்தைக் கேட்டிருந்தால் நான் அவருக்குத் தெளிவுபடுத்தி இருப்பேன்.
இவ்வாறு தகவலே இல்லாமல் பொய்யான ஒரு கருத்தை வெளியிட்டது மன வேதனை அளிக்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது. ஆகவே நாங்கள் அதற்குரிய நிருவாக சேவை அதிகாரிகள் மூலம் மக்களுக்கு ஊடக சந்திப்புடாக தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.
ஆனால் இவ்வாறு தரவுகள் இல்லாமல் கருத்துக்களை வெளியிடுவது உண்மையிலேயே வேதனை
அளிக்கின்றது விடயமாகவே பார்க்கின்றேன் .
குறித்த விடயம் சம்பவம் தொடர்பாக எமது அமைச்சுக்கு நாங்கள்
அறிவித்திருக்கின்றோம். அவர்கள் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள்
என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
