2 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடைய நாசா திட்டம்
இரண்டு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய கூடிய புதிய விண்கலம் (rocket) ஒன்றை நாசா (NASA) தயாரித்து வருகின்றது.
செவ்வாய் கிரகத்திற்கு சென்றடையும் பயணத்தின் கால அளவை குறைப்பதற்காகவும் மனிதர்களை பாதுகாப்பாக அனுப்புவதற்காகவும் இந்த புதிய விண்கலத்தை தயாரிப்பதாக நாசா (NASA)தெரிவித்துள்ளது.
பொதுவாக, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான தூரம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய தொழில்நுட்பத்தில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் 22 முதல் 24 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளாகும்.
இந்நிலையில், நாசா விஞ்ஞானிகள் மிக விரைவில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவதற்கான புதிய திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலம்
நாசாவின் புதிய திட்டத்தின் படி தயாரிக்கப்படும் விண்கலம் இரண்டு மாதங்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலம் (Pulsed Plasma Rocket/PPR) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் தீவிரமாக வேலை செய்ய Howe Industries நிறுவனத்திற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது.
நாசா விஞ்ஞானிகள்
அத்துடன் நாசா விஞ்ஞானிகள் புதிய விண்கலம் தொடர்பில் தெரிவித்ததாவது,
“இந்த விண்கலத்தின் உந்துவிசை அமைப்பு மிகவும் சிறப்பானது மற்றும் அதிநவீனமானது.
இது high specific impulse அல்லது Isp மூலம் பறக்ககூடியதுடன் அதன் இயந்திரத்தை இயக்குகிறது.
இதன்மூலம், இரண்டு மாதங்களில் செவ்வாய் கிரகத்திற்கு சரக்கு மற்றும் விண்வெளி வீரர்களை அனுப்ப முடியும்.
பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலத்தில் அணுக்கரு இணைவு சக்தி அமைப்பு நிறுவப்படும். அதன் மூலம் விண்கலம் சக்தி பெறுகிறது.
இதில் அணுக்கரு பிளவு நடைபெறுகிறமையால் ரொக்கெட் வேகமாக நகரும்.
பல வகையான விண்கலம்களுடன் ஒப்பிடுகையில், பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலம் (PPR) மிக சிறியது.
இந்த விண்கலம் சிறியதாக இருந்தாலும், கனரக விண்கலங்களை ஆழமாக விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்டது.
மேலும் விண்வெளி வீரர்கள் விண்மீன் காஸ்மிக் கதிர்களைத் தவிர்க்க அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளதன் மூலம் விண்வெளி வீரர்கள் நீண்ட நேரம் விண்வெளியில் பயணிக்க முடியும்.” என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
