பூமியை விட 5 மடங்கு பெரிய பிரம்மாண்ட வைரக் கோளை கண்டுபிடித்த நாசா
நாசாவின்(Nasa) ஜேம்ஸ் வெப் விண்கல ஆதார தொலைநோக்கி மூலம் 55 கன்க்ரி இ (55 Cancri e) எனும் சூப்பர் எர்த் (Super-Earth) கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கிரகம், பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கிரகம் தனது நட்சத்திரத்தை சுற்றி செல்லும் நேரம் வெறும் 17 மணி நேரம் மட்டுமே ஆகும்.
புதிய கிரகம்
இதனால், 2,400°C அதிக வெப்பநிலை பெற்றுள்ளதால், அதன் மேற்பரப்பு உருகிய எரிமலைப் பாறைகளை (molten lava) போல் காணக்கூடியதாக உள்ளது.
ஆராய்ச்சிகளின்படி, இந்த கிரகத்தின் மொத்த எடையின் மூன்றில் ஒரு பகுதி (One-third of the mass) வைரமாக இருக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.
55 கன்க்ரி இ கிரகத்தின் மேற்பரப்பு முழுவதுமாக கிராஃபைட் (Graphite) மற்றும் வைரம் போன்ற கார்பன் (Carbon) அடிப்படையிலான உருகிய அமைப்புகளால் மூடப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
55 கன்க்ரி இ கிரகத்தின் மிக வித்தியாசமான அம்சம் அதன் அதிக கோளசுற்று (Extreme Orbit) ஆகும்.
வெப்பநிலையால் உருகிய எரிமலை
வெறும் 17 மணி நேரத்தில் நட்சத்திரத்தைச் சுற்றி முடிக்கக் கூடிய இந்தக் கிரகம், அதன் மிகக் குறுகிய சுற்றுப்பாதையின் காரணமாக மிக அதிக வெப்பநிலையால் உருகிய எரிமலைக் கடலாக (Lava World) மாறியுள்ளது.
இந்த சூடான சூழ்நிலை, மனிதர்கள் வாழ முடியாத ஒரு கிரகமாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றது.
மேலும், விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்தக் கிரகத்தைச் சுற்றி இரண்டாம் நிலை வளிமண்டலம் (Secondary Atmosphere) காணப்படுவதாகவும், இது கிரகத்தில் உள்ள எரிமலை வெடிப்புகளால் உருவாகியிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் நிலை வளிமண்டலம், கிரகத்தின் அதீத பரிணாமத்துக்கான முக்கிய காரணியாக விளங்குவதால், எதிர்காலத்தில் கூடுதல் ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடிய முக்கியமான நுண்ணறிவுகளை இந்த கிரகம் வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |