கூடிய விரைவில் டெஸ்லா முதலீடுகள் இந்தியாவில்: எலான் மஸ்க் உறுதி
கூடிய விரைவில் டெஸ்லா முதலீடுகள் இந்தியாவுக்குள் நுழையும் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.
நான்கு நாள் விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கும் இடையில் இன்றையதினம்(21.06.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் பேசிய எலான் மஸ்க், ''நான் மோடியின் ரசிகன். இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார்.
நான் மோடியின் ரசிகன்
ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி எங்களை வலியுறுத்துகிறார். இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.
கூடிய விரைவில் இதற்காக நாங்கள் அறிவிப்போம் என நம்புகிறேன். நான் அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன்.
பிற பெரிய நாடுகளை விட இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது'' என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பல முறை அமெரிக்கா சென்று இருந்தாலும், தற்போதைய பயணம் என்பதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம்
இதிலும் முக்கியமாக இந்தியா - ரஷ்யா மத்தியிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படும் வேளையில் ரஷ்யா - பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் முதல் பல்வேறு உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த முக்கியமான காலக்கட்டத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
"I am Fan of PM Modi" : Elon Musk after meeting PM Modi in US.
— Megh Updates ?™ (@MeghUpdates) June 20, 2023
"I like him quite a lot. He is in full support of new companies and technology but he wants it to be at India's advantage. I am very excited about India's future. Will visit India next year". pic.twitter.com/r7Jn2lv9OD
இந்த விஜயத்தில் பல முக்கியமான முதலீடுகள் குறித்த அறிவிப்பு, ஆயுத ஒப்பந்தங்கள், சர்வதேச பாதுகாப்பு என பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் போதே எலான் மஸ்க் முதலீடுகள் குறித்து மோடியுடன் கலந்துரையாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |