தமிழில் கையெழுத்திடாத தமிழக தலைவர்கள் : ஸ்டாலினை கடுமையாக சாடிய மோடி
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (M. K. Stalin) கடுமையாக விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் சில தலைவர்கள்
தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியம் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சில நேரங்களில், தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களைப் பெறும்போது நான் ஆச்சரியப்படுகிறேன்.
அவர்களில் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை. நாம் தமிழைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்றால், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் மோடி குறிப்பிட்டு்ள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |